ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினர் நௌபர் மௌலவி மற்றும் ரிஷாட் பதியுதீன்

1600234971 7152766 hirunews 2
1600234971 7152766 hirunews 2

சஹரான் ஹஷீம் குழுவின் ஆலோசகராக செயற்பட்டு தற்போது குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பில் உள்ள நௌபர் மௌலவி இன்று இரண்டாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தற்போது குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலுள்ள அவரிடம் நேற்று சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் செய்யப்பட்டிருந்தது .

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .