தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாஆரம்பம் !

IMG 3100 384x288 1
IMG 3100 384x288 1

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இன்று ஆரம்பமாகியுள்ளது .

இன்றைய நிகழ்வுகள் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13வது வருடாந்த பொதுப்பட்டமளிப்பு விழா!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13வது வருடாந்த பொதுப்பட்டமளிப்பு விழா!

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Mittwoch, 16. September 2020

இன்று காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அன்றைய தினம் பிற்பகல் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது.

இரண்டாவது அமர்வு நாளை (நாளை) முற்பகல் 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பிற்பகல் முகாமைத்துவ வர்த்தக பீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

IMG 3069 720x450 2
IMG 3069 720×450 2

இந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.