மட்டக்களப்பு புதூர் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

IMG 5000
IMG 5000

மட்டக்களப்பு புதூர் பிரதேசதிலுள்ள மீனவர் சங்க கட்டிட பகுதியில் கைவிடப்பட்டிருந்த உள்ளூதயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று(15) இரவு விசேட அதிரடிப்படையினர், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டபிள்யூ.ஜி,எஸ். கயபிரித்த  தலைமையில் சப் இன்பெக்ஸடர் ஆர்.என். பிரேமகுமார, பொலிஸ் சாஜன்ட் அதிகாரி 13398, திஸநாயக்கா 76976,  லசந்திர 85659, பெரேரா 85345,  சம்பத் 20332 ஆகிய விசேட அதிரடிப்படையின் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலின் போதே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.