ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை!

e7cc3b23 3235f343 3b84db87 srilankan airlines 850x460 acf cropped 850x460 acf cropped
e7cc3b23 3235f343 3b84db87 srilankan airlines 850x460 acf cropped 850x460 acf cropped

வீசா மோசடியுடன் தொடர்புடைய பணியாளர்கள் நால்வரின் சேவை ஸ்ரீ லங்கா விமான நிறுவனத்தினால் இந்த வருடம் ஜுலை மாதம் முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியாளர்களை கைது செய்வது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் அந்த நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் தற்பொழுது விமான சேவையின் எந்தவொரு நடவடிக்கையிலும் தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீ லங்கா விமான சேவை முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.