உயர்தேசிய கற்கைநெறிகளிற்கு விண்ணப்பங்கோரல்

maxresdefault
maxresdefault

திறன்கள் அபிவிருத்தி, அமைச்சின் கீழ் வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்(SLIATE)2020 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை மாணவர்களிடம் கோரியுள்ளது. அதன்படி 2019 ஆம் ஆண்டில் அல்லது அதற்கு முன்னராக க.பொ.த. உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்கள் கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்களை மேள்கொள்ளலாம். விண்ணப்பதாரிகள் apply.Sliate.ac.lk என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பித்தல் வேண்டும். ஒன்-லைன் விண்ணப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர், முறைமையானது அதன் பிரதியொன்றை பிறப்பிக்கும்.  அந்த பிறப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சடிக்கப்பட்ட மற்றும் கையொப்பமிட்ட பிரதி மற்றும் பணப்பற்றுச் சீட்டும் என்பவற்றை பதிவுத் தபால் வழியாக 2020, ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ உரிய உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கு அனுப்பப்படல் வேண்டும்.


 நிகழ்ச்சித் திட்டத்திற்கான தெரிவு முறை Z.SCORE அல்லது நிறுவனத்தினால் நடாத்தப்படும் தெரிவு செய்தல் பரீட்சையில் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். பயிலுனர்கள் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா ,உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா, தகவல் தொழில்நுட்பம் போன்ற கற்கைநெறிகளிற்கு விண்ணப்பிக்க முடியும்.

பணக்கொடுப்பனவுகள் அனைத்தும் கொழும்பு-02, ஹயிட் பார்க் மக்கள் வங்கியின் கிளையில்  025-2-001-1-3397613 என்ற SLIATE இன் கணக்கிலக்கத்திற்கு 2020, ஒக்டோபர் மாதம் 06ஆந் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ வரவு வைக்கப்படல் வேண்டும். விண்ணப்பதாரிகள் ஒன்-லைன் முறைமையினால் பிறப்பிக்கப்பட்ட குறிப்பீட்டு இலக்கத்தினை தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்
 மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு www.sliate.ac.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடுவதுடன். 2020-09-04ஆம் திகதி வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலையும் பார்க்குமாறு கோரப்பட்டுள்ளது.