ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தேசிய சர்வமத செயற்குழு கருத்து

nirc
nirc

நாட்டின் ஜனா­தி­பதி அனைத்து இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பக் கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும் எனத் தெரி­வித்த சர்­வ­மதத் தலை­வர்கள், அவர் சிறு­பான்­மை மக்­க­ளுடைய உரி­மை­களைப் பாது­காக்­கக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

தேசிய சர்­வ­மத செயற்­கு­ழு­வி­னரால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்றுத் திங்­கட்­கி­ழமை கொழும்பு- ஹெக்டர் கொப்­பே­க­டுவ கம­நல ஆராய்ச்சி, பயிற்சி நிறு­வ­னத்தில் இடம்பெற்­றது.

இந்த ஊடக சந்­திப்பில் கிறிஸ்­தவ, பௌத்த, இந்து மற்றும் இஸ்லாம் மதத் தலை­வர்கள் கலந்து கொண்­ட­துடன், ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் எந்த வகையில் செயற்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில் தமது கருத்­து­களைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

அந்த வகையில் யாழ்ப்­பாணம் சர்­வ­மதப் பேரவை உறுப்­பினர் அருட்­தந்தை ஈனொக் பூ.புனி­த­ராஜா குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதித் தேர்தல் இடம்பெற­வுள்­ளது. இந்தத் தேர்தல் நாட்டின் சிறந்த எதிர்­கா­லத்­துக்கு எடுத்­துக்­காட்­டாக அமைய வேண்டும். இந்தத் தேர்தல் காலத்தில் நாம் மூன்று விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். இது தொடர்பில் சர்­வ­மதத் தலை­வர்கள் என்ற வகையில் நாம் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அந்த வகையில், ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் மூன்று விட­யங்­களில் கவனம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும்.

அடிப்­படை வாதக் ­க­ருத்­து­களின் ஊடாக மக்­களை திசை திருப்பும் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வெறுப்­பூட்டும் பொய்­யான கருத்­து­களை முன்­வைத்து பிர­சா­ரங்­களை மேற்­கொள்ளக் கூடாது. இன அடிப்­படை வாதத்தைப் பேசி மக்கள் மத்­தியில் பிளவை ஏற்­ப­டுத்­தாது சமா­தா­னத்­துடன் கூடிய அமை­தி­யான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பக்­ கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும்.

பொதுத்­தேர்தல் இடம்பெற­வுள்ள நிலையில் யாழ். பிர­தே­சத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் யார் எதிர்­கா­லத்தில் ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் அந்தப் பிரச்­சி­னை­களை கூடிய விரைவில் தீர்த்து வைக்­கக்­ கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். அதே வேளை இன­,மத, குல பேதங்­களைக் களைந்து சமா­தா­னத்­துடன், வாழக்­கூ­டிய சூழ்­நி­லை­யை எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு பெற்­றுக்­கொ­டுக்கக் கூடி­ய­வர்­க­ளாக இருத்தல் வேண்டும் என்றார்.

மௌலவி எஸ்.என்.எம்.சுல்­பிகார் குறிப்­பி­டு­கையில்,

நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வரக்­கூ­டி­யவர் நாட்­டி­லுள்ள அனைத்து இன மக்­க­ளுக்கும் உரிய தலை­வ­ராக தெரிவு செய்­யப்­ப­ட­வி­ருக்­கின்றார். அந்த வகையில், தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய ஜனா­தி­பதி இந்த நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு, அவர்­க­ளுடன் இணைந்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். அவர் ஒரு மதத்­தி­ன­ரையோ, வர்க்­கத்­தி­ன­ரையோ புறக்­க­ணித்து செயற்­ப­டு­ப­வ­ராக இருக்கக் கூடாது. ஏனெனில் ஒரு சாராரை மாத்­திரம் சேர்த்­துக்­கொண்டு ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது. ஏனெனில், இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் மக்கள் ஜனா­தி­பதி ஆகி­விட முடி­யாது. ஏனெனில் சிங்­கள, பௌத்த மக்­களே பெரும்­பான்மை இனத்­த­வ­ராக காணப்­ப­டு­கின்­றனர். ஆகவே, சிங்­கள பௌத்த தலைவர் ஒரு­வ­ரா­லேயே நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக முடியும்.

இந்­நி­லை­யி­லேயே சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய நாம் அவரை ஏற்று தெரிவு செய்­கின்றோம். ஆகவே, அவ்­வாறு தெரிவு செய்­யப்­படும் தலைவர் முன்­மா­தி­ரி­­யு­டை­ய­வராக இருத்தல் வேண்டும். ஓர் இன, மதத்தைச் சார்ந்­த­வ­ராக இருக்கக் கூடாது.

பெரும்­பான்­மை­யி­ன­ரது வாக்­கு­களை மாத்­திரம் கொண்டு ஜனா­தி­ப­தி­யா­கி­வி­டலாம் என்ற தேர்தல் பிர­சா­ரங்கள் சிறு­பான்மை மக்கள் மத்­தியில் குரோ­தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்­துள்­ளன. அதனை ஏற்­றுக்­கொள்ள முடியாது. ஏனெனில் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களைப் புறக்­க­ணித்து நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கி­வி­ட ­மு­டி­யாது. இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் சம­தா­னத்­துக்கு வழி­வ­குக்கக் கூடிய ஒரு­வரை தெரிவு செய்தல் அவ­சி­ய­மா­ன­தாகும் என்றார்.

ஸ்ரீ ஜின்­னா­ரத்ன தேரர் குறிப்­பி­டு­கையில்,

தேர்தல் கால­மாக இருப்­ப­தனால் தேசிய பாது­காப்பு தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. தேசிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக படை­யினர் கூறு­கின்­றனர். இந்­நி­லையில் தேசிய பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று நாம் கூறு­வோ­மானால் அது பாது­காப்பு படை­யி­ன­ருக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் செய­லாகும். ஆகவே பொய்­யான கருத்­து­களை முன்­வைப்­ப­தைத் தவி­ர்த்துக் கொள்­ள­ வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். ஜனா­தி­பதித் தேரதல் பிர­சா­ரங்­களின் போது இந்த விடயம் தொடர்பில் அவ­தா­னத்­துடன் தான் செயற்­பட வேண்டும்.

முழு நாடும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டே ஜனாதிபதிக்கான தேர்வு இடம்பெறுகின்றது. இதன்போது நாட்டின் வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர்களாக கருதப்பட வேண்டும். மாறாக அவர்களை இன,மத ரீதியில் பிரித்துப் பார்த்தல் பொருத்தமற்ற விடய மாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போல் அவர்களுடைய வாக்குகளும் முக்கியமானதாகும். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு அமைதியான தேர்தலை நடத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் சிறந்த தலைவரை தெரிவு செய்தல் அவசியமானதாகும் என்றார்.