மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள இறக்குமதி நடவடிக்கை!

201712060238263813 Limit parking fee for cinema theaters SECVPF
201712060238263813 Limit parking fee for cinema theaters SECVPF

இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை நீடிக்கும் எள்ற கருத்தும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக சந்தையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுதியாக உள்ள வாகனங்கள் தற்சமயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இறக்குமதிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் அதிகமான விலைக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் சில மாதங்களின் பின்னர் மீண்டும் இறக்குமதி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால்,புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்பவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.