அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தமுயற்சித்தால் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் -பந்துல குணவர்தன

BeFunky collage 5
BeFunky collage 5

நாட்டில் அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சித்தால் அரசியை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ,எந்தவித காரணத்திறக்காவும் அரிசியின் சில்லறை விலையை மாற்றுவதற்கு எந்தவிதமான எண்ணமும் கிடையாது என்று தெரிவித்த அமைச்சர்

மக்கள் முகங்கொடுத்துள்ள வாழ்க்கை செலவு பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதிகளவிலான நெல்லை சேகரித்து அதனை சந்தைக்கு விடாமல் சிலர் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.