கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு !

vlcsnap 2020 09 19 09h42m52s078 1
vlcsnap 2020 09 19 09h42m52s078 1

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக பிரதேச மட்டத்திலுள்ள உதவி அவசியமான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய கலைஞர்களுக்கு காசோலைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

vlcsnap 2020 09 19 09h43m12s924 1
vlcsnap 2020 09 19 09h43m12s924 1

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலைஞர்களுக்கான காசோலையை வழங்கி வைத்தார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களுக்கு காசோலை வழங்கி வைப்பு!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய கலைஞர்களுக்கு காசோலைகளை வழங்கி வைப்பு!

Gepostet von Thamil Kural – தமிழ்க் குரல் am Freitag, 18. September 2020

பொத்துவில், திருக்கோவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கஞைர்களுக்கு இதன்போது ரூபா 10,000.00 (பத்து ஆயிரம்) வீதம் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இருந்து 2020 ஆம் ஆண்டு இது வரை 79 கலைஞர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vlcsnap 2020 09 19 09h42m48s210 1
vlcsnap 2020 09 19 09h42m48s210 1

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்;, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரிம்சான், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

vlcsnap 2020 09 19 09h43m04s097 2
vlcsnap 2020 09 19 09h43m04s097 2