வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை!

AC2630D5 9455 462C 8004 740011120124 1
AC2630D5 9455 462C 8004 740011120124 1

மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுமெனவும் குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் மட்டகளப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, கடலுக்கு செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.