இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்..?

corona 1
corona 1

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் 200 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.