அமைச்சு பதவிகளை அதிகரிக்க அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வது தவறு! சந்திம வீரக்கொடி

வீரக்கொடி 720x380 1
வீரக்கொடி 720x380 1

நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றியால் உருவாக்கப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டாலும் அதனை உள்ளபடியே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சந்திம வீரக்கொடி நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் உருவாக்கிய சட்ட திருத்த வரைவே நாடாளுமன்றத்தில் அவரால் சமர்பிக்கப்பட உள்ளது. எனினும் அதே திருத்தச் சட்டம் உள்ளப்படியே நிறைவேற்றப்படும் என்று எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நபர்கள் நாடாளுமன்றத்திற்குள் வரலாம் என்ற சில சந்தேகங்களும் உள்ளன.

அமைச்சு பதவிகளை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் மேற்கொள்ள முயற்சித்தால் அது தவறு.

அரசாங்கத்தை சரியான வழிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது எமது பொறுப்பு எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.