கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

IMG a168530aa46ee54bd81c8f905c3d04c3 V 1
IMG a168530aa46ee54bd81c8f905c3d04c3 V 1

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியில்  கிணற்றில் இருந்து பெருமளவான வெடிபொருட்களை புளியங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

IMG 9b2d1ec765057945270532918cd24dbc V
IMG 9b2d1ec765057945270532918cd24dbc V


குறித்த பகுதியில் தனியார் காணிஒன்றில் அமைந்துள்ள கிணறுஒன்றை அதன் உரிமையாளர் இன்று துப்புரவு செய்துள்ளார்.


இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில்,புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். 

IMG a168530aa46ee54bd81c8f905c3d04c3 V
IMG a168530aa46ee54bd81c8f905c3d04c3 V


சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை முதற்கட்டமாக மீட்டிருந்தனர்.

IMG 9b2d1ec765057945270532918cd24dbc V 1
IMG 9b2d1ec765057945270532918cd24dbc V 1

குறித்த கிணற்றில் மேலும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதி மன்றின் அனுமதியுடன் தேடுதல் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG 138e04d87ee1de79a6042a7b8fffe8da V 1
IMG 138e04d87ee1de79a6042a7b8fffe8da V 1