கிளிநொச்சியில் 77.300 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!

Gancha 21.09 6
Gancha 21.09 6

கிளிநொச்சியில் நேற்று 77.300 கிலோகிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளிற்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பதிலே, கிளிநொச்சி பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியனகே (DIG) யின் உத்தரவிற்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சந்திரசேகர அவர்களின் கண்காணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் புஸ்பகுமார மற்றும் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீவகஸ்த சிறிசேன (CI) ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது 77.300 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு கையடக்க தொலைபேசிகள், படகு மற்றும் 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் ஆகியன கைப்பற்றப்பட்டுற்றன.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் சான்று பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.