பொலிஸார் மனுக்களை மீள பெற்றால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியும்-சி.வி.கே.சிவஞானம்

20200921 113950
20200921 113950

அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறப்பெறும் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(21) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது சி.வி.கே சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தியாக தீபம் திலீபனின் நினைவு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதை நீக்கக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்  எழுதி இருந்தார்கள். அந்த கடிதம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ஜனாதிபதி எந்த விதத்திலும் நீதிமன்ற விடயத்தில் தலையிட முடியாது என கருத்து  தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக இந்த அரசாங்கம் பொதுவான அரசியல் தீர்மானம் ஒன்றினை எடுத்து பொலிஸார் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மீளபெறும் பட்சத்தில் தமிழ் மக்கள் திலீபனின் நினைவேந்தல் நினைவு கூற முடியும். அது எந்த விதத்திலும் ஜனாதிபதி நீதிமன்றத்தில் தலையிடுவதாக கருத முடியாது என தெரிவித்துள்ளார்.