இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இரண்டு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் -டக்ளஸ் உறுதி

epdp
epdp

நாட்டின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இரண்டு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (22) சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்தியத் தரப்புடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், அமைச்சரவையிலும் கலந்துரையாடப்படவுள்ளது என்றும், இதன்படி அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, தென்னிலங்கையிலிருந்து வடக்கில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு கடல் பரப்பில் இந்திய மீனவர்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.