COPA குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

febbe0e0 331637bb 8cb20fe0 cope 850x460 acf cropped 850x460 acf cropped
febbe0e0 331637bb 8cb20fe0 cope 850x460 acf cropped 850x460 acf cropped

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த 11 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி, அரசாங்கம், அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்திறன் மற்றும் நிதி ஒழுங்கமைப்பு ஆகியவற்றை கண்காணிப்பதே COPA குழுவின் பணியாக அமைந்துள்ளது.

அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்களாக உதய கம்மன்பில, துமிந்த திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவண்ண, சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பேராசிரியர் திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்ணான்டோ, நிரோஷன் பெரேரா, பைசல் காசிம், அஷோக் அபேசிங்க, புத்திக பத்திரன, காதர் மஸ்தான், சிவஞானம் ஶ்ரீதரன், வைத்தியர் உபுல் கலபதி, ரட்ன சேகர வீரசுமன வீரசிங்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, மொஹமட் முஸ்ஸமில் மற்றும் பேராசிரியர் ஹரினி அமரசூரிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோப் என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திலுள்ள அறை எண் 5 இல் கோப் குழு நேற்றைய தினம் கூடியிருந்த நிலையில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டது.

இதற்கமைய பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினர்களாக மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சுசில் பிரேமஜயந்த, திலும் அமுனுகம, இந்திக்க அனுருத்த, பேராசிரியர் சரத் வீரசேகர, டீ வி சாணக்க, நாலக்க கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால், ரவூப் ஹக்கீம், அனுர குமார திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜகத் புஷ்பகுமார, இரான் விக்ரமரட்ண, ரஞ்சன் ராமநாயக்க, நளின் பண்டார, எஸ் எம் மரிக்கார், பிரேம்நாத் சி தொலவத்த, சாணக்கியன் மற்றும் பேராசிரியர் சரித ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நாளைய தினம் நாடாளுமன்றத்தில் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பிலான செயற்குழுவின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.