கல்முனையில் உணவு கையாளும் நிறுவன உரிமையாளருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு!

கணக்காளர் நியமனத்திற்கு இடைக்கால தடை 720x380 1
கணக்காளர் நியமனத்திற்கு இடைக்கால தடை 720x380 1

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட உணவு கையாளும் நிறுவன உரிமையாளருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று (23)
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜ.றிஸ்னி தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜஹ்பர், கல்முனை தெற்கு மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.பாறூக் போன்றவர்கள் கருத்துக்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பிரதான வளவாளராக கல்முனை தெற்கு வைத்திய அதிகாரி எம்.ஜ.றிஸ்னி கருத்துக்களை வழங்கியதுடன் இதில் பங்குபற்றிய உணவு கையாழும் நிறுவன உரிமையாளருக்கு நுகர்வோரின் உணவுப் பாதுகாப்பு, கடைகளின் சுத்தம், மருத்துவச் சான்றிதழின் அவசியம், வருடாந்த அனுமதிப் பத்திரம், ஊழியர்களின் சுத்தம் மற்றும் உணவுகளின் தரம் பற்றியும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் கல்முனை தெற்கு பொது சுகாதார பரிசோதகர்களான அப்பாஸ் எம்.நியாஸ், ஜே.எம்.நிஜாமுத்தீன், எம்.ஜுனைத்தீன், எஸ் ரவிச்சந்திரன் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.