ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள்

protest3
protest3

அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைய 10 ஆயிரம் வேலைவாய்ப்பினை உடனடியாக பெற்றுத்தருமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் இன்று ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கை தொடர்பில் அறியப்படுத்துவதற்காக இன்று முற்பகல் காலி முகத்திடலிலிருந்து பிரதமர் அலுவலகம் வரை நடை பேரணி ஒன்றையும் மேற்கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் சிலருக்கும் ஆர்பாட்ட நிறைவில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.