ஆசிரியர்களிற்கு சேவைநலன் பாராட்டுவிழா

IMG 3092
IMG 3092

வவுனியா பாவற்குளம் கணேசுவரா வித்தியாலத்தில் கல்விகற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களான யோ.மேகலா ,க.இந்துமதி,மற்றும் உடற்கல்வி ஆசிரியர் யோ. லோறன்ஸ் ஆகியோருக்கான சேவைநலன்பாராட்டு விழா பாடசாலை பிரதானமண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

IMG 3093
IMG 3093


பாடசாலையின் அபிவிருத்திச்சங்கம் மற்றும் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் சி.சிறிரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பழையமாணவரும், “கிசாளன்” ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளருமான ப.நந்தகுமார் கலந்துகொண்டார்.

IMG 3094
IMG 3094

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில்,விருந்தினர்களிற்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன்,ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்

IMG 3091
IMG 3091