20 க்கு எதிரான மனுக்களை பரிசீலிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழு!

supreme court 720x450 1
supreme court 720x450 1

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பல மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிக்க 5 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பரிசீலிக்க 5 நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் விபரம்,

தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய
புவனேக அலுவிஹாரே
பிரியந்த ஜயவர்தன
விஜித் மலல்கொட
சிசிர டி அப்ரூ

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் செப்டம்பர் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.