கண்டியில் ஆபத்தான மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அடையாளம்!

tourist 15032018 SPP GRY
tourist 15032018 SPP GRY

கண்டியில் ஆபத்தான மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தான மற்றும் சட்டவிரோத கட்டிடங்களை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் 21 பொறியியலாளர்களைக் கொண்ட இந்த குழு ஏற்கனவே தங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து கட்டுமானங்களிலும் முழு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆபத்தை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்காக கட்டுமான உரிமையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்குவதே முதல் படியாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பச்சிளம் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.

குறித்த கட்டிடம் தொடர்பான இறுதி அறிக்கை திங்கட் கிழமை பெறப்படும் என்று இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.