குப்பைக் கொள்கலன்களை ஏற்பதற்கு ஒப்புக்கொண்ட இங்கிலாந்து- இலங்கை சுங்கம்

images 1 4
images 1 4

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 263 குப்பைகள் அடங்கிய கொள்கலன்களில் 21 கொள்கலன்கள் நேற்றைய தினம் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கலன்களையும் ஏற்க இங்கிலாந்து ஒப்புக் கொண்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு 247 கொள்கலன்கள் மூலம் இந்த குப்பைகள் கொண்டு வரப்பட்டுள்ளமை விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.

குறித்த கொள்கலன்களில் பெரும்பாலும் மெத்தைகள் காணப்படுகின்றதுடன், மெத்தைகளுக்குள் மருத்துவ மற்றும் வேறு வகையிலான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட இந்த குப்பைகள், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் வளாகம் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளன.