திலீபனின் நினைவேந்தல் விவகாரம் ; மாவை தலைமையில் அடுத்த கட்ட கூட்டம்

maavai senathirajah
maavai senathirajah

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தினையடுத்து தற்காலிகமாக ஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத் கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஒன்று கூடினர்.

யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு கோத்தாபய அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்தது இதன் காரணமாக தமிழ் தேசிய பரப்பில் உள்ள 10 கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர்.

இவ்வாறு இனைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பில்  நாம் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பத்துக் கட்சிகளும் இன்று கலந்துரையாடினர். மேற்படி கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.