சரியான திட்டத்துடன் நிலையான அபிவிருத்தியை எதிர் காலங்களில் மேற்கொள்ள வேண்டும்- கே.காதர் மஸ்தான்

DSC 0768
DSC 0768

எமது மக்களின் எதிர் கால பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய வகையில் நாங்கள் திட்டங்களை வகுத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

DSC 0806
DSC 0806


-மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் புதன் கிழமை(30) காலை 9.30 மணியளவில் மன்னார் பிரதேசச் செயலாளர் மா.பிரதீப் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

DSC 0748
DSC 0748


மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.வினோ நோகராதலிங்கம்,கே.திலீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC 0811
DSC 0811


-மேலும் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலோயே பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவ்வாறு தெரிவித்தார்.

DSC 0798
DSC 0798


-அவர் மேலும் தெரிவிக்கையில்
நீண்ட நாட்களின் பின்னர் மன்னார் நகர பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம் பெற்றுள்ளது.
எமது பகுதியுடைய அபிவிருத்திகள் தொடர்பாக நாங்கள் நல்ல முடிவுகளை மேற்கொண்டு சரியான திட்டத்துடன் நிலையான அபிவிருத்தியை எதிர் காலங்களில் மேற்கொள்ள வேண்டும்.திட்டங்கள் அமுல்   படுத்தப்பட்டுள்ள போதும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் பல பிரச்சினைகள் உள்ளது.

DSC 0759
DSC 0759


மன்னாரை பொறுத்த வகையில் வடிகானமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான பயனை அடைந்துள்ளோமா என்பது தெரியாது.சாதாரண மழை பெய்தால் கூட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

DSC 0809
DSC 0809


எனவே அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் அடையாளம் காணக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இக்கூட்டத்தை நாங்கள் பயண்படுத்திக் கொள்ள வேண்டும்.


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர்  மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய ஒரு பொறுப்பை எனக்கு வழங்கி உள்ளனர்.எனவே அனைவருடைய ஒத்துழைப்பும் எனக்கு தேவை. அரசாங்கத்தின் கொள்கைகளை செயல் படுத்துகின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குங்கள்.
காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல்,குடி நீர் பிரச்சினை, விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் முழுமையாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


குறித்த குழு கூட்டத்தில் பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. வீதி,குடி நீர்,சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, மீண்பிடி, விவசாயம் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, கிடப்பில் உள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு வழங்கப்படாத நிதியை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுகின்றமை தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.