ஐக்கிய தேசிய கட்சி யின் வீழ்ச்சிக்கு மைத்திரியே காரணம் – குற்றம் சுமத்தும் திஸ்ஸஅத்தநாயக்க

thissa 720x380 1
thissa 720x380 1

ஐக்கிய தேசிய கட்சி யின் வீழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் சுகந்திரகட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றஉறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலருமான திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “எமது இலக்காக இருந்தது ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக அமர்த்த வேண்டும் என்பதே ஆகும்.

இத்தகைய நிலைப்பாட்டை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இறுதியில் மாற்றியமைத்தார். அதாவது ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு நாட்டின் தலைவராக வருவதற்கு உரிய வாய்ப்பு இல்லை என எண்ணியே இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தினார்.

ரணில் விக்ரமசிங்க போட்டியிடவில்லை என்றால் சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய ஆகியோரை போட்டியிடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென்ற கோணத்தில்தான் நான் இருந்தேன்.

அதற்காக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன வருகை தந்தது, ஜனாதிபதி வேட்பளராக போட்டியிடுவதற்கு அல்ல பிரதமர் போட்டியாளராக போட்டியிடுவதற்காகும்.

ஆனால் எமது கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டு இறுதியாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தார்கள்.

இதன்போது நான் கூறினேன். இந்த தீர்மானத்தினால் ஐக்கிய தேசியக்கட்சி சிதைவடைவதுடன் நாடு பெரும் பாதிப்பை சந்திக்கும். ஆகவே இத்தகைய செயற்பாட்டை செய்ய வேண்டாமென வலியுறுத்தினேன்.

நீங்கள் தொடர்ந்து இவ்வாறு பயணிப்பீர்களாயின் நான் இதில் பயணித்து மயானத்தை அடைய விரும்பவில்லை. மயானத்திற்கான வாசல் வழியிலேயே இறங்கி விடுவேன் என்றேன்.

ஆனால், நான் கூறிய இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. தற்போது அதன் தாக்கத்தை அனுபவிக்கின்றார்கள்

தற்போது ஐக்கிய தேசியக்கட்சியும் சிதைவடைந்து நாடும் நாசமாகியுள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது .