மாட்டிறைச்சி தடை தொடர்பான குற்றச்சாட்டு எனது குடும்பத்திற்கு எதிரான தாக்குதல் – நாமல் ராஜபக்ஷ

அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நாட்டிற்கு மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய விமான நிலைய பணிப்பாளரும் அவரது மாமாவுமான திலக் வீரசிங்கவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

தடையைத் தொடர்ந்து, வீரசிங்க இப்போது நாட்டிற்கு மாட்டிறைச்சி இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக வதந்திகள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகின.

அத்தோடு இது அமைச்சரவைக்கு தடை முன்மொழியப்பட்டமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் கூறப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த செய்திகள் தனது குடும்பத்திற்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல் என்றும் தனது குடும்பத்தில் யாரும் இறைச்சி இறக்குமதியில் ஈடுபடவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது குடும்பத்திற்கு எதிராக மக்கள் தவறான குற்றச்சாட்டுகளை பரப்புவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.