எம்டி நியூ டயமண்ட் கப்பல் குறித்து மேலும் சர்ச்சை

ship
ship

இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்காது, ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பலை அதன் இயக்குநர்கள் இலங்கை கடற்பரப்பிலிருந்து இழுத்துச் செல்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன கூறுகையில், 

அரசாங்கத்தின் பங்குதாரர்கள் அளித்த இழப்பீட்டு கோரிக்கையை செலுத்துவது தொடர்பாக கப்பலின் உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கப்பல் உரிமையாளர்களுக்கு 442 மில்லியன் ரூபா இழப்பீட்டு கோரிக்கையை அரசாங்கம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.

இது தீப்பிழம்பைக் அணைப்பதற்கும், பேரழிவால் ஏற்பட்ட கடல் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் மதிப்பிடப்பட்ட செலவினங்களுக்கும் ஆகும்.

பனமேனிய கச்சா எண்ணெய் டேங்கரின் உரிமையாளர்கள் ‘எம்டி நியூ டயமண்ட்’ கப்பல் தொடர்பில் முழுமையாக தீர்வு காண ஒப்புக் கொண்டனர்.

எனினும் தற்போது இந்த உத்தரவுகளுக்கு இணங்காது, கப்பலை அதன் இயக்குநர்கள் இலங்கை கடற்பரப்பிலிருந்து அரேபிய கடற்பரப்பு நோக்கி இழுத்துச் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த கப்பல் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகள் நாளை தீர்க்கப்படும் என்று இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.