‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ – ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு

president0000
president0000

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நவம்பர்(Nov.02) மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்ட விசல் பொலன்னறுவை நீர் வழங்கல் திட்டத்தின் கதுருவளை நீர் தாங்கிக் கோபுரம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

பொலன்னறுவை புதிய நகரம், பழைய நகரம், கதுருவளை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 2240 மில்லியன் ரூபா செலவில் விசல் பொலன்னறுவை நீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதேநேரம் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 430 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட செவனபிடிய நீரியல் வள அபிவிருத்தி நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்ட ரத்மல்கண்டிய சுகாதார சிகிச்சை நிலையமும் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதற்காக 110 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் முகமாக அவ்வளாகத்தில் ஜனாதிபதியினால் மரக்கன்றொன்றும் நடப்பட்டது.

பிரதேச விவசாய சமூகத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிரிபுர கமநல சேவை மத்திய நிலையமும் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 110 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முதுன்கடவல சுகாதார சிகிச்சை நிலையமும் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

பிரதேசத்தில் சமய புத்தெழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் 25 இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நிகவதலன்த ஸ்ரீ பூர்வாராம விகாரையின் மகாசங்கத்தினருக்கான தங்குமிடத்தை மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அரலகங்வில யாய 05இ ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் 25 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய அறநெறிப் பாடசாலை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

திம்புலாகல காசியப்ப பிரிவெனாவின் பிரிவெனாதிபதி சங்கைக்குரிய தேவாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட பிரதேசத்தின் மகாசங்கத்தினரும் ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, நகர பிதா சானக சிதத் ரணசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.