பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்

vlcsnap 2020 10 09 14h03m19s747
vlcsnap 2020 10 09 14h03m19s747

கிழக்கு மாகாணத்தில், பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியதுறையினர் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய துறையை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கிழக்கு மாகாண பாரம்பரிய மற்றும் ஆயுள்வேத பாதுகாப்புச் சபையினர் அமைச்சா்களை சந்தித்து பேசியுள்ளனா்.

சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜங்க அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரை அமைச்சுக்களில் சந்தித்து கலந்துரையாடல்யொன்றை நடத்தி உள்ளனர்.

கிழக்கு மாகாண பாரம்பரிய மற்றும் ஆயுள்வேத பாதுகாப்புச் சபையின் ஆலோசகரும், சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான எஸ்.லாபீரின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண பாரம்பரிய மற்றும் ஆயுள்வேத பாதுகாப்புச் சபையின் தலைவரும் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளருமான கே.எல்.நக்பர் தலைமையிலான குழுவினர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமுதாய சுகாதார இராஜங்க அமைச்சர் சிசிற ஜயகொடியுடனான சந்திப்பு அவரது அமைச்சிலும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியுடனான சந்திப்பு சுகாதார அமைச்சிலும் இடம் பெற்றது.

கிழக்கு மாகாணத்தில், பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியதுறையினர் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய துறையை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கிழக்கு மாகாண பாரம்பரிய மற்றும் ஆயுள்வேத பாதுகாப்புச் சபையினர் அமைச்சர்களிடம் இதன் போது எடுத்துக் கூறினர்.

பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியதுறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் விரைவில் கிழக்கு மாகாணம் வருகை தந்து பிரச்சினைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர்கள் இதன் போது தெரிவித்தனர்.

அமைச்சர்களின் சேவையைப் பாராட்டி கிழக்கு மாகாண பாரம்பரிய மற்றும் ஆயுள்வேத பாதுகாப்புச் சபையினரால் நினைவுப்படிகம் வழங்கி வைக்கப்பட்டது.