விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்திவைப்பு

Wimal Weerawansa
Wimal Weerawansa

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (Nov.04) உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த வழக்கின் சாட்சிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக வீதியை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.