ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய பத்மசிறி ஜயமான்ன!

presidential commision
presidential commision

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பதவியில் இருந்த போது அவரின் முறையற்ற செயற்பாடுகள் குறித்து அமைச்சுக்கு அழைத்து எச்சரிக்கை விடுத்ததாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பபத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த மலல்கொட குழுவின் உறுப்பினரான சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன நேற்று இரண்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.

இதன் போது சாட்சியம் அளித்த அவர் ´நான் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு குறித்த முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டனவா என்பது தொடர்பில் ஞாபகம் இல்லை´ என கூறியுள்ளார்.

அதேபோல் பொலிஸ் பயங்கரவாத விசாரணைண பிரிவுக்கும், அரச புலனாய்வு பிரிவுக்கும் இடையில் தொழில் ரீதியான பிரச்சினைகள் நிலவியதை தனது சேவை காலத்தில் அவதானித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது பொலிஸாரிடம் காணப்பட்ட பிரச்சினை என்ன என ஆணைக்குழுவின் தலைவர் அவரிடம் வினாவியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர் ´முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பங்கேற்ற பல நிகழ்வுகளில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பிரச்சினைகள் காணப்பட்டன. அதற்கு ஊடகங்கள் பலத்த பிரச்சாரங்களை வழங்கின. இது சரியான விடயம் அல்ல என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது´ என கூறியுள்ளார்.

இதன்போது ஆணைக்குழுவின் தலைமை நீதிபதி ´அமைச்சுக்குள் பொலிஸ்மா அதிபரை நீக்க வேண்டும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டதா என வினாவியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அவர், ´அப்போது நாம் முன்னாள் பொலிஸ்மா அதிபரை அழைத்து எச்சரித்தோம். அப்போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக செயற்பட்ட ரஞ்ஜித் மத்தும பண்டாரவும் அவருக்கு ஆலோசனை வழங்கினார்´ என கூறியுள்ளார்.

தொடர்ந்து சாட்சியம் வழங்கிய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர், நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கு கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தாக கூறியுள்ளனர்.

அதேபோல், முன்னைய அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தால், சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் தலையிட அதிகாரிகள் தயக்கம் காட்டினர்.´ ஏன பத்மசிறி ஜயமன்ன மேலும் தெரிவித்துள்ளார்.