ஜெயபுரம் மக்களிற்கான 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது(புதிய இணைப்பு)

IMG 1091 1
IMG 1091 1

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கிராம  மக்கள்
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தங்களுக்குரிய வயல் காணிகளை
விடுவிக்குமாறும் தொடர்ச்சியான நடவடிக்கையில் ஈடுப்பட்ட வந்த நிலையில்
இன்று 11-10-2020 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது.

IMG 1087
IMG 1087

 ஜெயபுரம் மக்களுக்குச் சொந்தமான வயல் காணிகள் யுத்தம் நிறைவுக்கு  வந்த
நிலையில்  பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாத வகையில்  வனவளத் திணைக்களம்
அனுமதி மறுத்து வந்த நிலையில் மக்கள் பல்வேறு நடவடிக்கைகளில்
தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வந்தனர். 1983 ஆண்டு குடியேற்றப்பட்ட மக்களுக்கு
ஒரு ஏக்கர் வீதம் வயல்காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அந் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை

IMG 1103
IMG 1103

தற்போது ஜெயபுரம் கிராமத்தில் 540 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட
வனவளத் திணைக்கள  அதிகாரி  இதனை இன்று உத்தயோகபூர்வமாக தெரிவித்துள்ளார். 

IMG 1091
IMG 1091