ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

31 05 2020 TAMIL NADU RAIN தமிழ் நாடு மழை
31 05 2020 TAMIL NADU RAIN தமிழ் நாடு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல்வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

விசேட அறிவிப்பு : வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று வட அகலாங்கு 14.5 என் இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.5E இற்கும் இடையில் காணப்பட்டது. அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் விருத்தியடைந்து ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு அந்தமான் கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கிழக்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் (13N – 18N, 85E – 96E) இன்றிலிருந்துஅடுத்த சில நாட்களில் பலத்த அல்லது மிகக் கடுமையான காற்று, பலத்த மழைவீழ்ச்சி, கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான கடல் போன்ற நிலைமைகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி வரை மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகஅல்லது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக்காணப்படும்.