கந்தளாய் அரச வனப்பாதுகாப்பு பகுதியில் காடுகளை அழித்த மூவர் கைது

625.0.560.320.160.600.053.800.700.160.90 4
625.0.560.320.160.600.053.800.700.160.90 4

திருகோணமலை – கந்தளாய் அரச வனப்பாதுகாப்பு பகுதிக்கு சொந்தமான காடுகளை அழித்த குற்றச்சாட்டின் பேரில் மிரிஸ்வெவ பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை – மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த மினா விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஆர்.ஆதம்பாவா (55வயது) உட்பட 44 மற்றும் 48 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.

இவர்கள் கந்தளாயில் அரசுக்குச் சொந்தமான வனப்பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள மிரிஸ்வெவ காட்டுப்பகுதியில் காடுகளை அழித்து சேனைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக துப்பரவு செய்து கொண்டிருக்கும்போது வவுனியா விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் இணைந்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்து மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சந்தேகநபர்களை நாளைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.