சட்ட விதிமுறைகளை மீறும் தனியார் கல்வி நிலையங்கள்- அதிருப்தியில் வவுனியா மக்கள் !

ssss
ssss

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் விளைவாக நாட்டிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் இவ் அறிவித்தலை மீறி வவுனியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருவதாக வவுனியா மாவட்ட பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

அந்தவகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு தெரிவித்திருந்தார். ஆனாலும், வவுனியாவின் பண்டாரிக்குளம், கூமாங்குளம், வைரவபுளியங்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் சில தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதன் காரணமாக சில மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்வதால் அங்கு பாடத்திட்டம் முன்னோக்கி நகரும் என்பதால் அங்கு கற்ற அனைத்து மாணவர்களும் கொரோனா அச்சத்துடன் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் தெரிவித்துள்ள இதேவேளை இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி தனியார் கல்வி நிறுவனகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .