ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் மைத்திரி !

maithri 1
maithri 1

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

2 ஆவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்ட அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை ஆகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யுத்தம்நிறைவடைந்த பின்னர் இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.