ரிஷாட் பதியுதீனின் சகோதரனின் விடுதலை தொடர்பில் வெளியான புதிய தகவல் !

unnamed 1 7
unnamed 1 7

முன்னாள் அமைச்சரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் பொலிஸாருக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறும் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் இடம்பெற்றஉயிர்த்த ஞாயிறுதாக்குதலின் முக்கிய குற்றவாளிசஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணினார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .