நாட்டில் ஏற்பட்டுள்ள மஞ்சளுக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது – ரமேஷ் பத்திரண

629oDDWIPnnjmrWsc2568OTkrnnKgNSg
629oDDWIPnnjmrWsc2568OTkrnnKgNSg

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மஞ்சளுக்கான தட்டுப்பாடு தற்காலிகமானது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அப்படி இருந்தும் இறக்குமதி செய்துள்ளனர். அவற்றை மீள ஏற்றுமதி செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்கின்றோம்.

இதற்காக நுகர்வோரிடம் மன்னிப்பு கோருகின்றோம். எனினும் 2021ஆம் ஆண்டளவில் உள்நாட்டு உற்பத்தியே போதுமானதாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.