கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்தவேண்டும்-மருத்துவர் சுதத் சமரவீர!

coronavirustreatment1 wide e5c5c03066a91715b4f0726b6236ed46076a1701
coronavirustreatment1 wide e5c5c03066a91715b4f0726b6236ed46076a1701

இலங்கையில் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையால் கொரோனா தொற்றாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 12 மருத்துவமனைகளில் உள்ள கட்டில்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 1503 படுக்கைகள் நோயாளர்களால் நிரம்பி விட்டதாக தொற்றுநோயியல் பிரிவின் நாளாந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

தற்போது தேசிய காய்ச்சல் மருத்துவமனை, வெலிகந்த மருத்துவமனை மற்றும் கம்புருகமுவா மருத்துவமனை ஆகியவை படுக்கை திறனை விட அதிகமாக நோயாளிகளை அனுமதித்துள்ளன.

இதற்கிடையில், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்தவேண்டுமென தொற்றுநோயியல் பிரிவின் தலைமை மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.