நாட்டில் வர்த்தகமாக மாறிய கொரோனா! குற்றம் சுமத்தியுள்ள சம்பிக்க

Chambika
Chambika

பணம் தொடர்பான பேராசை கொண்ட சிலர், கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வர்த்தகமாக மாற்றிக்கொண்டுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உட்பட முழு மக்களுக்கு செய்து வரும் அர்ப்பணிப்புகளுக்கு செய்யும் அநீதி எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ராஜகிரிய வாகன விபத்து தொடர்பான வழக்கில் ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக கூறப்படும் சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ காரணமாக அமைந்த விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர்களை கைது செய்யாது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சாதாரண மக்களை கைது செய்வது அநீதியானது. இந்த பிரச்சினையை மேலும் பெரிதுப்படுத்துவது தேசிய குற்றம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.