கொரோனா தொற்றாளர்கள் பயணித்த 6 பேருந்து வண்டிகள் அடையாளம்!

333 4
333 4

கொரோனா தொற்றாளர்கள் அண்மையில் பயணித்த ஆறு பேருந்து வண்டிகளை அடையாளம் கண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அவற்றின் விபரம்:

01.ND 4890 – கொழும்பு தொடக்கம் மெதகம

02.ND 2350 – மகும்புர தொடக்கம் காலி

03.ND 549 –  அம்பலாங்கொடை தொடக்கம் கடவத்தை (பஸ் வண்டியின் இலக்கம் பூரணத்துவம் பெறவில்லை)

04.ND 6503 –  கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம்

05.ND 9788 – எல்பிட்டிய தொடக்கம் கொழும்பு

06.NF 7515 – காலி தொடக்கம் கடவத்தை

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர், 

அனைத்து நெடுஞ்சாலை பேருந்துகளும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும்.

சொகுசு பேருந்துகளை இயக்குபவர்கள் பயணிகள் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்னர் அவர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். தற்போது சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது.

பேருந்து நடத்துனர்கள் தங்கள் பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் உடல்நலம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது தகவல்களை பெற 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அமைச்சர் காமினி லொகுகே மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது,