ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மைத்திரி மற்றும் ரணிலுக்கு அழைப்பாணை!

716529896f5453c563370fb45b630fa6d0e95bea
716529896f5453c563370fb45b630fa6d0e95bea

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியவர்களுக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க போன்று பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஏனையவர்களுக்கும் அன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன ஆகியவர்கள் இன்றைய தினம் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்ததாக தெரியவந்துள்ளார்.