‘அனைவருக்கும் உளநலம் எந்த ஒருவருக்கும் எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமான மிகச் சிறந்த முதலீடு’

unnamed 11 1
unnamed 11 1

இன்று (15) தேசிய உளவளததுணை தினமாகும் ‘அனைவருக்கும் உளநலம் எந்த ஒருவருக்கும் எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமான மிகச் சிறந்த முதலீடு’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் எல்லாப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உளவளத்துணை நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் வளர்ச்சிபெற்று வருவதை அறியமுடிகிறது. இன்று எல்லாத்துறைகளிலும் பேசப்படும் ஒன்றாக மாறிவருகின்றது. உளவளத்துணை என்பது ஒரு பேசும் சிகிச்சையாகும். இதன்மூலம் பிரச்சினைகளுடன் வருபவரை ஏற்று அவருடன் பேசுவதன் மூலம் அவருக்கு பிரச்சினை பற்றிய தெளிவை ஏற்படுத்தி அதிலிருந்து விடுபடுவதற்கான விருப்பமும் வழிகாட்டல்களும் ஏற்படுத்தப்படுகிறது. என் கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உளவளத்துணை மற்றும் சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நெளஷாத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்

உளவளத்துணையின் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. ஆரோக்கியம் என்பது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. உளவளத்துணை ஒருவரின் இந்த நான்கு அம்சங்களிலும் கவனம் வெலுத்துகின்றது. இன்றைய உலகில் மனிதர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உள ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து வருகிறது.

ஒருவரின் உடல் பாதிக்கப்படும் போது அது அவருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் உள ஆரோக்கியம் பாதிக்காப்படும் போது அவரும் அவரது குடும்பம் மற்றும் சமூகமும் பாதிப்புக்குளாகின்றது.
உலகில் வாழும் மனிதர்கள் அனைவருகும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் உளவளத்துணை தேவைப்படுகின்றது. அதாவது போதைப் பொருள் பாவனை தொடர்பான சிக்கல்கள், இழப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை, கொடுமைப்படுத்தலுக்குள்ளாதல், உடல் நலம் தொடர்பான பாதிப்புகள், மனஆரோக்கியம் குறைவடைதல், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள், அதிர்ச்சிகலுக்குள்ளாதல், கற்றல் தொடர்பான பிரச்சினைகள், மனஅழுத்தங்கள், பதட்டம் மற்றும் சுயகௌரவம் குறைதல் போன்ற சந்தர்பங்களில் உளவளத்துணைச் சிகிச்சை அவசியமாகும்.

உளவளத்துணையினை மேற்கொள்வதற்காக பயிற்றப்பட உளவளத்துணையாளர்கள் உள்ளார்கள். இன்று நமது நாட்டில் பல்துறை அனுபவம் பெற்ற துணையாளர்கள் காணப்படுவது சிறப்பான அம்சமாகும். இருந்தபோதிலும் உளவளத்துணை தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளதா என்று பார்க்கும் போது அது குறைவாகவே காணப்படுகின்றது. மக்கள் உளவளத்துணை சிகிச்சை என்பது மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் ஒன்றாகவே நோக்குகின்றார்கள். இந்தப் பார்வை சமூகத்திலிருந்து மாற்றியமைக்கப்பட வேண்டும் இதற்காக எதிர்காலத்தில் செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.’உள ஆரோக்கியம் நிறைந்த ஓர் சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்’ என தெரிவித்துள்ளார்