தங்கங்கள் வென்று சாதனை படைத்த வவுனியா மாவட்ட குத்துச்சண்டை வீரர்கள் கௌரவிப்பு!

DSC00847
DSC00847

வடமாகாண விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற வவுனியா மாவட்ட வீர வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வு இன்று(17.10.2020) இடம்பெற்றது.

வடமாகாண ரீதியாக இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்று சாதனைப்படைத்த வீர வீராங்கனைகள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கெளரவிப்பு நிகழ்வில் வீரர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு , பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இதன் போது ஒரு வீரருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்ற வடமாகாணதை சேர்ந்த ஐந்து மாவட்டங்களின் வீர வீராங்கனைகள் பங்குபற்றிய குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாவட்ட வீரர்கள் ஆறு தங்கங்களைப் பெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.