எதிர்காலத்தில் நாடு முடக்கப்படும் அபாயம் ஏற்படக்கூடும்-அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

1534566620 haritha 2
1534566620 haritha 2

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாடு முடக்கப்படும் அபாயம் ஏற்படக்கூடும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ​வைத்தியர் ஹரித அளுத்கே, தற்போதைய செயல்முறை திருப்திகரமாக இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் முடக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுகள் ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்படாவிட்டால், அவற்றை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வைரஸ் பரவுவதை தவிர்க்க இயலாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவு இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.