இந்திய மீனவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை கடற்படை

vlcsnap 2020 10 18 12h17m04s745
vlcsnap 2020 10 18 12h17m04s745

கச்சத்தீவு அருகே அதி நவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.

15 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் சென்றவர்கள் பெரும் நஸ்டத்தோடு கரை திரும்பியதால் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்களை படகுகள் விரட்டி அடித்த சம்பவம் தமிழக கடலோர கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2ஆம் திகதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் வானிலை மைய எச்சரிக்கை, உள்ளிட்ட காரணங்களால் 15 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.

இந்த நிலையில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்த நேற்று சனிக்கிழமை மீன் வளத்துறையிடம் அனுமதி பெற்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நேற்று நள்ளிரவு கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஐந்திற்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தி விரட்டியடித்தனர்.

இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டு படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை கடலில் வீசி விட்டு கரை திரும்பினர்.

இதனால் படகு ஒன்றுக்கு 40ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவத்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் மீனவர் பிரச்சினையில் கவனம் செலுத்தி இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இலங்கை கடற்படை பிரச்சினைகள் இல்லாமல் மீன்பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் நடுக்கடலில் இலங்கை கடற்படை விரட்டி அடித்த சம்பவம் தமிழக கடலோர கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.