புதையல் தோண்டிய ஒன்பது பேருக்கு விளக்கமறியல்

2004fall the gospels for the 21st century part 19 buried treasure 1920x1080 0
2004fall the gospels for the 21st century part 19 buried treasure 1920x1080 0

திருகோணமலை சேருநுவர பகுதியில் புதையல் தோண்டிய ஒன்பது சந்தேக நபர்களை இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் நேற்று (17) உத்தரவிட்டார்.

நிலாவெளி, வெருகல், ஹிங்ராக்கொட, தோப்பூர் மற்றும் கொழும்பு,காலி பகுதியைச் சேர்ந்த 38,20,29,40,41,27, மற்றும் 47 வயதுடைய ஒன்பது பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, வட்டவான் எழுத்துக்கல்மலை பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த வேளையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பின் போது ஒன்பது சந்தேக நபர்களையும் கைது செய்து சேருநுவர காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும்,சேருநுவர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் நான்கு அடிக்கு மேல் புதையல் தோண்டியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய அலவாங்கு 2, மண்வெட்டி 2, தாட்சி 2, சவல் 2 மற்றும் கூடைகள் 3, பிக்கான் 1 போன்றன கைப்பற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை காவல்துறையினர் மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தவிட்டார்.