நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு இலங்கை பெண் தெரிவு!

download 25
download 25

நியூசிலாந்தில் நடைபெற்ற பொது தேர்தலில், இலங்கையை பிறப்பிடமாக கொண்ட மனித உரிமைகள் ஆர்வலரும் சட்ட வல்லுனருமான வனுஷி வால்டேர்ஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

வடமேற்கு ஒக்லண்ட் இன் மேல் துறைமுக தொகுதி சார்பில் தெரிவாகியுள்ள அவர், நியுசிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராகும் முதலாவது இலங்கையைக் பூர்வீகமாக கொண்டவராவார்.

தேசிய வேட்பாளரும் கிரிக்கட் துடுப்பாட்ட வீரருமான ஜக் பீசான்ட்டை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இவர் பெற்ற மொத்த வாக்குகள் 14 ஆயிரத்து 142 என பதிவாகியுள்ளது.

அதேவேளை, பிரதமர் ஜெசீனா ஆடேன் பாரிய வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் தெரிவாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினை சிறப்பான முறையில் கையாண்டதனாலேயே அதிக அளவிலான ஆதரவினை அவருக்கு வழங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.