கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Coronavirus Covid 19 696x392 1
Coronavirus Covid 19 696x392 1

மினுவாங்கொடை கொத்தணி கொரோனா பரவலுடன் தொடர்புபட்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தை அண்மித்ததாகக் காணப்படும் ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று அங்கு மேலும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே இதுவரை தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புபட்ட ஏனைய தொழிலாளிகளுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.